தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சைரன் ஒலிக்குமா?
ஆரல்வாய்மொழி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நகர பூங்கா திடலில் நேரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘சைரன்’ கருவி அமைக்கப்பட்டது. இந்த சைரன் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிக்கும். இது வேலைக்கு செல்பவர்களுக்கு மிக உதவியாக இருந்து வந்தது. 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சைரன் தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே பழுதடைந்த சைரனை மீண்டும் ஒலிக்க செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வகுமரன், ஆரல்வாய்மொழி.
குரங்கு
விளவங்கோடு தாலுகா மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் புலியூர் சாலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலக்காலை, மாங்கோடு, குளவிளை, ஆயவிளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குரங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து அங்கு விளையும் பயிர்களையும், நிலத்தையும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.எஸ்.ஷிஜின், அம்பலக்காலை.
நோய்பரவும் அபாயம்
விளவங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4-வது வார்டு புறாவிளை பகுதியில் கான்கிரீட் தளம் இல்லை. குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. கழிவுநீரால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே எந்த கால கட்டத்திலும் கழிவுநீர் தேங்கி நிற்காமல் சீராக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஜின்ராஜ், புறாவிளை.
விபத்து ஏற்படும் அபாயம்
முளகுமூடு மற்றும் மருதூர்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குழிக்கோட்டில் இருந்து வெள்ளிகோடு செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராஜ், குழிக்கோடு.
சேதமடைந்த சாலை
குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் போதெல்லாம் சாலைகள் சேதமடைந்து விடுகிறது. அதிலும் தற்போது பெய்து வரும் மழையால் நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம், காட்டாத்துறை, சுவாமியார் மடம் போன்ற பகுதிகளில் சாலைகளில் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாத அளவு மோசமாக உள்ளது. எனவே சாலையை போடும் போதே தரமாக போட்டால் இந்த நிலையை தவிர்க்கலாம். தற்போது சேதம் அடைந்துள்ள சாலைகளை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
சீரமைக்க வேண்டிய சாலை
நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில் நிலையத்தில் இருந்து அறுகுவிளைக்கு செல்லும் சாலை தான் இது. மழை பெய்தாலே சேறும், சகதியுமாக மாறி விடும். இந்த சாலை வழியாக நடந்தோ, இரு சக்கர வாகனத்திலோ கூட செல்ல முடியாத நிலை தான் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெனீஷ், அறுகுவிளை.
Related Tags :
Next Story