தீபாவளி பண்டிகையையொட்டி ரோஜா பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையையொட்டி ரோஜா பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ஒசூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி ரோஜா பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரோஜா பூக்கள் சாகுபடி
ஒசூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பசுமை குடில்களில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரோஜாமலர்களின் விலை அதிகரித்து அதிக அளவு விற்பனை ஆகும்.
இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒசூர் பகுதிகளில் பசுமை குடில்களில் வளர்க்கப்படும் ரோஜாமலர்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான 12 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா தற்போது 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒசூர் பகுதிகளில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரோஜா பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் மலர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story