பரமத்திவேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகை திருட்டு


பரமத்திவேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 4 Nov 2021 1:27 AM IST (Updated: 4 Nov 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரின் கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெல்டிங் பட்டறை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சோமு (வயது 55). இவர் பரமத்திவேலூரில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை சோமு தனது காரில் சென்று 4 பவுன் நகைகளை வாங்கி கொண்டு பட்டறைக்கு வந்தார். பின்னர் காரை பட்டறை முன் நிறுத்திய அவர் நகைகளை காரில் வைத்து விட்டு பட்டறையில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து கொடுத்தார். 
கண்ணாடி உடைப்பு
பின்னர் வீட்டுக்கு செல்ல தனது காரை எடுக்க வந்தார். அப்போது காரின் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே பார்த்தபோது காரில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. 
இதுகுறித்து சோமு வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story