நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.
மூதாட்டி பலி
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 500 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 501 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 52,335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 52,339 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 386 ஆக அதிகரித்து உள்ளது.
475 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 57 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 51 ஆயிரத்து 410 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 475 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story