தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை படுஜோர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை படுஜோர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Nov 2021 1:43 AM IST (Updated: 4 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை படுஜோராக நடந்தது. மேலும் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம்
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் பூ வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. தீபாவளிக்கு பூக்களின் தேவைப்பாடு அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களும் அதிகளவில் பூ மார்க்கெட்டிற்கு வந்து தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இதனால் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விற்பனை படுஜோராக நடந்தது. 
நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,600-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், ஜாதி மல்லி ரூ.520-க்கும், காக்கட்டான் ரூ.700-க்கும், அரளி ரூ.100, நந்தியாவட்டம் ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை வாங்கி சென்றனர். விலை உயர்வால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story