சிவகிரி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


சிவகிரி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Nov 2021 2:01 AM IST (Updated: 4 Nov 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சிவகிரி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தார். இங்கு முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் இசக்கி வரவேற்றார். பின்னர் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள், கட்டிடத்தின் தன்மை, சுற்றுப்புற சூழல், நோயாளிகள் வருகை பற்றி கேட்டறிந்தார். கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக டாக்டரிடம் விளக்கம் கேட்டார். 
முன்னதாக சிவகிரி தாலுகா முள்ளிக்குளம், தலைவன் கோட்டை, நெல்கட்டும் செவல், கூடலூர், தென்மலை, தேவிபட்டணம் போன்ற பகுதிகளுக்குச் சென்று பள்ளிக்கட்டிடங்களின் தன்மை, குறைபாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.
தேவிபட்டணத்தில் உள்ள ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தின் பணிகள் நடப்பதையும் பார்வையிட்டார்.

Next Story