முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் பிரிவுக்குட்பட்ட பீட் பகுதிகளில் வாசுதேவநல்லூர் வனவர் உபேந்திரன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ராமநாதபுரம் கண்மாய் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டுக்கம்பி, கண்ணிவெடிகள் வைத்து முயல் வேட்டையாடி இறைச்சி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அதே பகுதியை ேசர்ந்த கனகராஜ் என்பவர் முயல் வேட்டையாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரை வனத்துறையினர் கைது செய்து வாசுதேவநல்லூர் வன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நெல்லை மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவுப்படி கனகராஜூக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story