சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபருக்கு வலைவீச்சு
பத்ராவதி டவுனில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவமொக்கா: பத்ராவதி டவுனில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுமி பலாத்கார முயற்சி
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சிறுமியை சாக்லெட் தருவதாக தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு, வாலிபர் சாக்லெட்டை கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, வாலிபரின் வீட்டில் இருந்து அழுதுகொண்டு தனதுவீட்டிற்கு வந்தாள். அப்போது சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கதறி அழுதபடி கூறினாள்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், பத்ராவதி போலீசில் உடனடியாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விஷயம் தெரிந்து வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் சிறுமியை, வாலிபர் தனது வீட்டிற்குள் அழைத்து செல்வதும், சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவரும் சிறுமியை, வாலிபர் துரத்தியது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story