வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 5 நெருப்புக்கோழிகள் சாவு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 5 நெருப்புக்கோழிகள் சாவு.
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்புக்கோழி இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. கடந்த 27-ந்தேதி 5 நெருப்புக்கோழிகள் இறந்தன. அதை தொடர்ந்து 3 நெருப்புக்கோழிகள் இறந்தன. இறந்த நெருப்புக்கோழிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவற்றில் பேக்டீரியா, வைரஸ் மற்றும் நச்சுயியல் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மற்ற நெருப்புக்கோழிகளும் பூங்கா கால்நடை டாக்டர்களின் 24 மணி நேர தொடர் கண்காணிப்பில் உள்ளன.
தீவிர முயற்சியின் மத்தியிலும் நேற்று 2 நெருப்புக்கோழிகள் இறந்தன. நெருப்புக்கோழிகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க 10 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் பார்வையிட்டனர்.
நிபுணர் குழுவின் ஆய்வில் முந்தைய இறப்பு மற்றும் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் தீவிர நச்சுத்தன்மை (பூஞ்சை நச்சுக்கள் மற்றும் பூச்சு கொல்லிகள்), நீர் நச்சுத்தன்மை, (நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள்), நெருப்புக்கோழிகளில் பொதுவான பேக்டீரியா நோய்கள் (கோழி காலரா மற்றும் ஆந்த்ராக்ஸ்) வைரசால் ஏற்படும் ரானிகட் நோய், நியூ கேஸ்டில் நோய் இவற்றால் இறப்பு ஏற்படவில்லை என தெரிவித்தனர். போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story