கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை தீபாவளி வாழ்த்து தொிவித்தாா்.


கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை தீபாவளி வாழ்த்து தொிவித்தாா்.
x
தினத்தந்தி 5 Nov 2021 1:01 AM IST (Updated: 5 Nov 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை தீபாவளி வாழ்த்து தொிவித்தாா்.

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீப திருவிழாவான தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பண்டிகை கொண்டாட்டம், அனைவருக்கும் நல்லதை கொண்டு வரட்டும். சுகாதார பூர்வமான விளக்கும், அனைவரின் வாழ்க்கையிலும் வளரட்டும். மாநில மக்களுக்கு இறைவன், ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிடைக்க ஆசி வழங்கட்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில், "மாநில மக்கள் அனைவருக்கும் நரக சதுர்த்தி தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தீமைகள், மோசமான குணத்தை கொண்டவர்களை வெளியேற்றியதன் அடையாளமான நரக சதுர்த்தி, மக்களின் கஷ்டங்கள், வேதனைகளை தீர்த்துவைத்து அனைவருக்கும் நல்லது செய்யட்டும். இருள் நீங்கி வெளிச்சத்தை ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகை அனவருக்கும் நன்மைகளை செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story