வாய்க்கால் கரையில் உடைப்பு


வாய்க்கால் கரையில் உடைப்பு
x
தினத்தந்தி 5 Nov 2021 3:37 PM IST (Updated: 5 Nov 2021 3:37 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு சீரைமைக்கப்பட்டது.

காங்கேயம், 
காங்கேயம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு சீரைமைக்கப்பட்டது. 
கீழ்பவானி வாய்க்கால்
பவானிசாகர் அணையில் இருந்து  கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில்  கீழ்பவானி வாய்க்கால் பெருந்துறை அருகே கண்ணவேலம்பாளையம் பகுதியில், கரையில் உடைப்பு ஏற்பட்டது. 
இதனால் விளை நிலம், கிராமத்தில் வீடுகள் உள்ள பகுதி, சாலையிலும் தண்ணீர் ஓடியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும்  தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
உடைப்பு
இந்நிலையில் காங்கேயம் அருகே மரவபாளையம் ஊராட்சி, மொசக்குட்டிவலசில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் 95 வது மைல் பகுதியில் மதகையொட்டிய கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள் முருகேசன், ராமகிருஷ்ணன், ஈஸ்வரன், பழனிசாமி ஆகியோர் டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரங்களை வரவழைத்தனர். மரவபாளையம் ஊராட்சி தலைவர் கீதாமணிசிவக்குமார் உடனடியாக 100 நாள் திட்ட பணியாளர்களை வரவழைத்து மணல் மூட்டைகளை அடுக்கியும் தடுப்பு ஏற்படுத்தினர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளான காங்கேயம் கீழ்பவானி உதவி பொறியாளர் சபரிநாதன், கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியம், சென்னிமலை உதவி பொறியாளர் ஜெயசந்திரன், முத்தூர் உதவி பொறியரளர் குமரேசன் ஆகியோர் உடைப்பை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். 4  மணிநேர போராட்டத்திற்கு பிறகு உடைப்பு சரிசெய்யப்பட்டது.
இது குறித்து காங்கேயம் கீழ்பவானி  சபரிநாதன் கூறும்போது மரவபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு பகுதியில் பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டது. மணல் மூட்டை அடுக்கி மண் போடப்பட்டதுள்ளது. பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தண்ணீர் சீராக செல்கிறது. என்றார். 
--



Next Story