கடைவீதிகளில் குவிந்த வடமாநிலத்தவர்கள்
திருப்பூரில் கடைவீதிகளில் வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். பூங்காவில் மக்கள் கூட்டம் களைகட்டியது.
திருப்பூர்
திருப்பூரில் கடைவீதிகளில் வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். பூங்காவில் மக்கள் கூட்டம் களைகட்டியது.
2 லட்சம் பேர்
பின்னலாடை நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி வெளிமாவட்ட தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். அதுபோல் வெளிமாவட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து தீபாவளிக்கு முந்தைய நாள் வரை ரெயில் மற்றும் பஸ்களில் புறப்பட்டனர். 2 லட்சம் பேர் வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.
வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்ற பின்னர் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையன்று திருப்பூர் மாநகர வீதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் குவிந்தனர். தீபாவளி பண்டிகைக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லாததால் அவர்கள் திருப்பூரில் உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் தங்கியுள்ளனர்.
வடமாநிலத்தவர் குவிந்தனர்
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்றுமுன்தினம் கடைவீதிகளில் வடமாநில இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். குமரன் ரோடு, புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு, பஸ் நிலையங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் காணப்பட்டனர். கடைவீதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். அதுபோல் நேற்று காலை முதல் மதியம் வரை வடமாநில தொழிலாளர்கள் கடைவீதிகளுக்கு வந்திருந்ததை காண முடிந்தது.
விடுமுறை என்பதால் திருப்பூரில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றதால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதுபோல் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் மக்கள் அதிகம் வந்திருந்தனர். வடமாநில இளைஞர்கள், இளம்பெண்கள் ஜோடி, ஜோடியாக சுற்றித்திரிந்தனர். சிறுவர்களுடன் குடும்பம், குடும்பமாகவும் பூங்காவுக்கு வந்து மக்கள் பொழுதை கழித்தனர்.
--------------
-
Related Tags :
Next Story