தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி தினத்தன்று ரூ.5 கோடிக்கு மது விற்பனை
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி தினத்தன்று ரூ5 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட மதுவிற்பனை ரூ.25 லட்சம் குறைவாகும்.
டாஸ்மாக்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக மதுபானம் விற்பனை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனாலும் மக்கள் மதுபானத்துக்காக ஏராளமான தொகையை செலவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் ரூ.5¼ கோடி அளவுக்கு மதுவிற்பனையாகி இருந்தது.
ரூ.5 கோடி
இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையைாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் பார்கள் கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கின. தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் மொத்தம் 10 ஆயிரம் பெட்டி பீர் மற்றும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டை விட, சுமார் ரூ.25 லட்சம் வரை மதுபானங்கள் விற்பனை குறைந்து உள்ளன. தீபாவளிக்கு முந்தைய தினத்தில் ரூ.3½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.
Related Tags :
Next Story