முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கூடலூர்
கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விழா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கி உள்ளது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் கோவில்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், காலை 10 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோன்று கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சன்னதியில் முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூடலூர் பகுதியில் உள்ள 1-ம் மைல் சக்தி முருகன், சூண்டி கல்யாண மலை முருகன், பந்தலூர் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சிறப்பு பூஜை
கோத்தகிரி அருகே சக்திமலையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 மணியளவில் ஸ்கந்த ஹோமம், சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, ஸ்ரீ சுப்பிரமணியர் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனைக்கு பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சூரசம்ஹாரம்
இதையடுத்து வருகிற 8-ந் தேதி வரை தினந்தோறும் கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜை, அர்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது.
9-ந் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது.
மதியம் 12 மணிக்கு சூரசம்ஹாரம் மற்றும் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 1 மணிக்கு மகா தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story