திருச்செந்தூர் அருகே இங்கைக்கு கடத்த முயன்ற 2டன் விரலி மஞ்சள் பறிமுதல் கடலோர காவல் படையினர் நடவடிக்கை

திருச்செந்தூர் அருகே இங்கைக்கு கடத்த முயன்ற 2டன் விரலி மஞ்சள் பறிமுதல் கடலோர காவல் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2021 7:55 PM IST (Updated: 5 Nov 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கடலோர காவல்படையினர் கைது ெசய்தனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கடலோர காவல்படையினர் கைது ெசய்தனர்.
2 டன் மஞ்சள்
திருச்செந்தூர் அருகே ஜே.ஜே. நகர் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் நேற்று முன் ரோந்து சென்றனர். 
அப்போது கடற்கரை அருகே நின்று கொண்டிருந்த லோடு வேனில் சோதனை நடத்தினர். இதில் 63 மூடைகளில் சுமார் 2 டன் விரலி மஞ்சள் இருப்பது தெரிய வந்தது. 
2பேர் கைது
இதையடுத்து வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர், தூத்துக்குடியை அருகே மீளவிட்டானை சேர்ந்த ராஜா (வயது 27), துத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த சுந்தர் (31) ஆகியோர் இலங்கைக்கு படகு மூலம் மஞ்சள் மூடைகளை கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், மஞ்சள் மூட்டைகள் மற்றும் லோடுவேனை பறிமுதல் செய்தனர். பின்னர் மஞ்சள் மூட்டைகளுடன் 2 பேரையும்  தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகளிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர்.

Next Story