வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 60). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். காவனூரில் உள்ள அவரது வீட்டில் அவரது மனைவி கோகிலா உள்ளார். கோகிலா திருச்சியில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு திருச்சிக்கு சென்றார். திருச்சியில் 3 நாட்கள் தங்கியிருந்த கோகிலா தீபாவளிக்காக காவனூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது.
12 பவுன் நகை
இதனால் அதிர்ச்சி அடைந்த கோகிலா, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ 5 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. இது குறித்து கோகிலா கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story