கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவர் கைது
நாட்டறம்பள்ளி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவரை, பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, தப்பியோடியவர் தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவரை, பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, தப்பியோடியவர் தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பாரத கோவில்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் பாரத கோவில், மாரியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளன. நேற்று மாலை மர்மநபர் ஒருவர் அங்குள்ள உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைத் திருடிக்கொண்டிருந்தார்.
இதை, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்ததும் மர்மநபர் கையில் கிடைத்தக் காணிக்கைப் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.
பொதுமக்கள் திரண்டு பின்தொடர்ந்து விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அப்போது தப்பியோடிய மர்மநபர் பதற்றத்தில் கோவில் அருகில் உள்ள ஒரு தரைமட்டக்கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் மர்மநபருக்கு காயம் ஏற்படவில்லை.
கிணற்றின் கரையில் திரண்ட பொதுமக்கள், அவரை மேலே வருமாறு கூறினர். இதையடுத்து அவர், கிணற்றில் இருந்து மெதுவாக மேலே ஏறி வந்தார். அவரை, பொதுமக்கள் பிடித்து வைத்துக்கொண்டு நாட்டறம்பள்ளி போலீசுக்கு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்டியலை உடைத்து கொள்ளை
தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பிடித்து வைத்திருந்த மர்மநபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மர்மநபரிடம் விசாரித்தபோது, அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்த கோழி என்ற மோகன் (வயது 45) எனத் தெரிய வந்தது.
அவர் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆத்தூர்குப்பம், கல்நார்சம்பேட்டை, அக்ராகரம், வெலக்கல்நத்தம், பச்சூர், புதுப்பேட்டை, மல்லப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள கோவில்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டார்.
கைது
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story