பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்.
இவரது மனைவி சுமிதா திருப்பத்தூர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு பணி முடிந்ததும் வாணியம்பாடி நோக்கி வந்த பஸ்ஸில் ஏறி பால்நாங்குப்பம் கூட் ரோடு பகுதியில் இறங்கினார். பின்னர் செல்போன் பேசிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி ஒரே பைக்கில் வேகமாக வந்த 3 பேர் சுமிதா செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் சுமிதா தனது செல்போனை பத்திரமாக பிடித்து கொண்டிருந்ததால் செல்போனை பிடுங்க முயன்ற மர்ம நபர்கள் மூன்று பேரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். உடனே எழுந்த 3 ேபரும் எழுந்து தப்பித்து ஓடினர்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களில் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பி மாயமானார்.
விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் அரவிந்தன் (வயது 21), கார்த்திக் (21) என்பதும் தப்பி ஓடியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளபடி பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பதும் தெரியவந்தது.
அரவிந்தன். கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்து தப்பி ஓடிய சூர்யாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஏலகிரி மலை பொன்னேரி கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே சுமிதாவிடம் செல்போன் பறிக்க முயன்ற வழக்கில் தப்பி ஓடிய சூர்யா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story