காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீஸ் விசாரணை


காதல் திருமணம் செய்த 4 மாதத்தில்  தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 Nov 2021 10:38 PM IST (Updated: 5 Nov 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினாா்.


திண்டிவனம், நவ.6-
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே உள்ள எஸ். கடூர் கிராமத்தை சேர்ந்தவர்  சந்திரன் மகள் வினிதா (வயது 21). டிப்ளமோ படித்துள்ளார். இவரும் ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திகேயன் (27) என்பவரும் காதலித்து, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் ஏப்பாக்கம் கிராமத்தில் இவர்கள் வசித்து வந்தனர். வினிதாவின் தாயார் லோகநாயகி கடந்த 3 மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். தனது தாய் இறந்ததில் இருந்து வினிதா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயாருக்கு தீபாவளி படையல் வைத்து வழிபட கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு எஸ். கடூருக்கு வினிதா சென்றார்.  அங்கு தன் வீட்டின் அருகிலிருந்த தேக்கு மரத்தில், நேற்று தனது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் வனிதா பிணமாக கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து, அதிர்ச்சியடைந்தனர்.  தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story