கனமழைக்கு வீடு இடிந்தது


கனமழைக்கு வீடு இடிந்தது
x
தினத்தந்தி 5 Nov 2021 10:39 PM IST (Updated: 5 Nov 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

கனமழைக்கு வீடு இடிந்தது

தொண்டி, 
திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக மங்கலக்குடி அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி பாப்பாத்தி (வயது 65) என்பவரது வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து குடி ஊராட்சி தலைவர் சரவணன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன், மங்கலக்குடிவருவாய் ஆய்வாளர் கேசவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அரசின் நிவாரண உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story