கால்வாயில் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலி


கால்வாயில் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலி
x
தினத்தந்தி 5 Nov 2021 10:45 PM IST (Updated: 5 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கால்வாயில் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலி

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்குமார் (வயது 40), ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். 

சுந்தர்குமார் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். 

அப்போது அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் அவர் தவறி விழுந்து விட்டார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story