பிளேடால் உடலை அறுத்து ராணுவ வீரர் தற்கொலை


பிளேடால் உடலை அறுத்து ராணுவ வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Nov 2021 10:48 PM IST (Updated: 5 Nov 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் பிளேடால் உடலை அறுத்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆச்சி நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 74). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சரோஜா. ஜெயபாலன், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ெஜயபாலன் தனது உடலில் பிளேடால் பல இடங்களில் கீறி தற்கொலைக்கு முயன்றார். 


இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கிடந்தார். வீட்டுக்கு வந்த அவருடைய மனைவி,  ஜெயபாலன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story