உள்ளாட்சி தேர்தலுக்கு 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


உள்ளாட்சி தேர்தலுக்கு 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 5 Nov 2021 10:53 PM IST (Updated: 5 Nov 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 258 வார்டுகளுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் 258 வார்டுகளுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
பரிசோதனை
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பகுதி எந்திரங்கள் முதல் கட்ட பரிசோதனை சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பெல் நிறுவன என்ஜினீயர்கள் மூலம் நடைபெற்ற இந்த பரிசோதனையை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
 பின்னர் அவர் கூறியதாவது:-
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி முதல்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என்ஜினீயர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகளுக்கு உட்பட்ட 90 வார்டுகளுக்கும் மானாமதுரை பேரூராட்சி நீங்கலாக 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 258 வார்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,945 மின்னணு வாக்குச்சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப் பட உள்ளது. 
வாக்குப்பதிவு
இதற்காக பெங்களூரு பெல் நிறுவன என்ஜினீயர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல்கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் லோகன், சிவகங்கை நகராட்சி ஆணையர் ராஜேசுவரன், நகராட்சி பொறியாளர் பாண்டிஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story