வைகையில் தண்ணீரை திறக்க கோரிக்கை


வைகையில் தண்ணீரை திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2021 11:01 PM IST (Updated: 5 Nov 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

வைகை தண்ணீரை கூடுதலாக திறந்து மேலநெட்டூர் கண்மாயை நிரப்ப வேண்டும் என்று ஊராட்சி தலைவர், விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

மானாமதுரை, 
வைகை தண்ணீரை கூடுதலாக திறந்து மேலநெட்டூர் கண்மாயை நிரப்ப வேண்டும் என்று ஊராட்சி  தலைவர், விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.
மதகு அணை
மானாமதுரை அருகே வேதியரேந்தலில் கடந்த 1974-ம் ஆண்டு பார்த்திபனூர் மதகு அணை கட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வேதியரேந்தல் மதகு அணையின் இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேலநெட்டூர், கீழ நெட்டூர், குறிச்சி, உள்ளிட்ட 39 கிராமங் களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
இதன் பயனாக 15 ஆயிரம் எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மேலநெட்டூர் கண்மாய்க்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விதி. 
தட்டுப்பாடு
ஆனால் நடைமுறையில் ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையினர் பெயரளவில் தண்ணீர் திறப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 2 ஆண்டுகளாக போதிய மழையின்றி விவசாயம் இந்த பகுதியில் பாதிக்கப் பட்டதுடன் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. 
விவசாய கிணறுகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. விவசாயிகள் பலரும் கூலிவேலைக்காக வெளியூர் சென்று விட்டனர். தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் பலரும் ஊர் திரும்பி உள்ளனர். பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து தண்ணீரை கொண்டு வந்து கண்மாயை நிரப்ப வேண்டும் என மேலநெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார் உள்பட விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மதுசூதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story