கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 5 Nov 2021 11:59 PM IST (Updated: 5 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நொய்யல்
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், உப்புபாளையம் மாரியம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன், சேமங்கி மாரியம்மன், புன்னம் மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், தவிட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதியம்மன், திருக்காடுதுறை மாரியம்மன், நஞ்சை புகளூர் புளியமரத்தான் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story