புதுக்கோட்டையில் ரூ.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ரூ.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
புதுக்கோட்டை,
தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வீட்டில் இனிப்பு, பலகாரங்களை சாமி படத்திற்கு படையலிட்டு பூஜை செய்து, புதிய ஆடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதேபோல் பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு சென்றும் வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பொழுதுபோக்கிற்காக பலர் திரையரங்களுக்கு சென்று படம் பார்த்தனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரவில் மத்தாப்பூ, பட்டாசு வெடித்ததில் நகரப்பகுதி ஜொலித்தது. மேலும் புகைமூட்டம் பரவி இருந்தது. பனியும் லேசாக இருந்ததால் புகைமூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ரூ.11 கோடிக்கு மது விற்பனை
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை மதுப்பிரியர்கள் மது அருந்தி உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 3-ந் தேதியும், 4-ந் தேதியும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 3-ந் தேதி ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. நேற்று முன்தினம் ரூ.6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தம் ரூ.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாகவும், தினமும் வழக்கமாக ரூ.2½ கோடி முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். தற்போது பண்டிகையால் இருமடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்றதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story