கார் மோதியதில் மின்கம்பம் - சுற்றுச்சுவர் சேதம்
ராஜபாளையத்தில் கார் மோதியதில் மின்கம்பம் - சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா (வயது 32). இவர் ராஜபாளையம் நீதிமன்றம் வழியாக காரில் வந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திருப்பத்தில் திரும்ப முடியாமல் தாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர், மின்கம்பம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. சுற்றுச்சுவரும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வடக்கு போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த கோபிகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story