வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு போனது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் சாமிதுரை(வயது 30). இவரது மனைவி அருள்மொழி(25). கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிதுரை தனது சொந்த ஊரான வேப்பந்தட்டை தாலுகா நூத்தாப்பூருக்கு சென்றார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அருள்மொழியும் தீபாவளி பண்டிகைக்காக நூத்தாப்பூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் பக்கத்து வீட்டை சேர்ந்த மகாலட்சுமி, சாமிதுரை வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சாமிதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது. நகைகளை போர்வைக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததால், அவை தப்பின. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story