சொத்து பிரச்சினையில் அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு


சொத்து பிரச்சினையில் அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 6 Nov 2021 2:27 AM IST (Updated: 6 Nov 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

சொத்து பிரச்சினையில் அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், தங்கராஜ். இவர்கள் அண்ணன், தம்பி ஆவார்கள். இவர்களது மகன்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சினை முற்றிய நிலையில், தங்கராஜின் மகன் ரஞ்சித்(வயது 42), ராஜேந்திரனின் மகன்களான ரமேஷ் (35), ராம்குமார் (22), ராம்கி (24) ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த 3 பேரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெங்கனூர் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story