கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
திரிபுரா மாநிலத்தில், முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தொண்டர் அணி செயலாளர் தஸ்தகீர் தலைமை தாங்கினார். டவுன் கமிட்டி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் சையத் இர்பானுல்லா உசேனி சாஹெப், மாநில பிரதிநிதி சாதிக்பாஷா, மாவட்ட தலைவர் நூர் முஹம்மத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட துணை செயலாளர் ரிஸ்வான் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா மாநிலத்தில் பள்ளிவாசல்கள், தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், வன்முறை சம்பவங்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story