பாளையங்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு


பாளையங்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 6 Nov 2021 3:20 AM IST (Updated: 6 Nov 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தூக்குப்போட்டு சாவு

நெல்லை:
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 30). பெயிண்டராக வேலைபார்த்து வந்தார். இவர் ரெயில் விபத்தில் ஒரு காலை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நம்பிராஜன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story