அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு


அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 6 Nov 2021 3:37 AM IST (Updated: 6 Nov 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு


Article-Inline-AD

நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் வானுமாமலை. இவருடைய மகன்கள் மாரிச்செல்வம் (வயது 28), சுடலைமுத்து (26). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று டவுனில் உள்ள ஒரு பட்டாசு கடையில் வெடி வாங்க சென்றனர். அப்போது கடைக்காரருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரிச்செல்வம், சுடலைமுத்து ஆகிய 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையே அவர்கள் 2 பேரும் டவுன் வயல் தெருவை சேர்ந்த முத்தையா (40) என்பவர் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி, மணிபுரத்தில் உள்ள அவரது டீக்கடைக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த முத்தையா, 2 பேரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story