வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 23 அடியை தொட்டதும்உபரி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு


வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 23 அடியை தொட்டதும்உபரி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு
x
தினத்தந்தி 6 Nov 2021 8:43 AM IST (Updated: 6 Nov 2021 8:43 AM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 23 அடியை தொட்டதும் உபரி நீரை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பூந்தமல்லி,

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.18 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,903 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 

ஏரிக்கு 335 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 148 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் கூடுதலாக மழை பெய்யும் என்பதால் 22 அடிவரை நீரை தேக்கி வைக்கவும், டிசம்பர் மாதத்துக்கு பிறகு அதிக மழை இருக்காது என்பதால் அப்போது 23 அடி வரை நீரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்ட உடன் உபரி நீரை திறக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அதேநேரத்தில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அதிக அளவில் உபரி நீரை திறக்காமல் மெல்ல மெல்ல தண்ணீரை வெளியேற்றுவதற்கும் அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

Next Story