தொழில் அதிபரின் துப்பாக்கி திருட்டு


தொழில் அதிபரின் துப்பாக்கி திருட்டு
x
தினத்தந்தி 6 Nov 2021 9:10 AM IST (Updated: 6 Nov 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல் அருகே தொழில் அதிபரின் துப்பாக்கி திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா (வயது 42). தொழில் அதிபரான இவர், சொந்தமாக பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறார். இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தின் டீலராகவும் இருந்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர், பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு தனது காரில் சென்று இனிப்புகளை வழங்கினார். 

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த கோபி கிருஷ்ணா, காரில் இருந்த பையில் வைத்திருந்த தனது கை துப்பாக்கி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள்ளும், வீட்டிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தனது கைத்துப்பாக்கியை காணவில்லை என மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

மாயமான கைத்துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பி வைத்து இருந்ததாகவும் தெரிகிறது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story