திருவள்ளூரில் அர்ச்சகர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
திருவள்ளூரில் அர்ச்சகர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் எம்.ஜி.எம் நகர் ஐஸ்வர்ய லட்சுமி தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 28). இவர் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா தனது குழந்தையுடன் கோயம்புத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
சத்தியநாராயணன் 29-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்றார். மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. போலீஸ்விசாரணையில் திருட்டில் ஈடுப்பட்டது சென்னை கிண்டி பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்த அரவிந்த் குமார் (37) மற்றும் சென்னை பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த விஜயராஜ் (27) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இருவர் மீதும் சென்னை போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார்அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 21 பவுன் தங்க நகைகளை மீட்டு சத்தியநாராயணனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story