உப்பாறு ஓடை தடுப்பணை நிரம்பியது


உப்பாறு ஓடை தடுப்பணை நிரம்பியது
x
தினத்தந்தி 6 Nov 2021 4:25 PM IST (Updated: 6 Nov 2021 4:25 PM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடிமங்கலம்,
பெதப்பம்பட்டியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பணைகள்
குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர், உடுமலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் தங்கம்மாள் ஓடையிருந்து சுத்திகரிக்கப்பட்டு உப்பாறு ஓடைக்கு சொல்கிறது. 1965ஆம் ஆண்டு உப்பாறு அணை கட்டப்பட்டது. உப்பாறு அணையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6 ஆயிரம்ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி திட்டத்தில் இரண்டு மண்டல பாசனம் செயல்பாட்டில் இருந்தபோது உப்பாறு அணைக்கு பிரதான கால்வாயில் குடிமங்கலம் அருகேயுள்ள அரசூர் ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படும். அரசூர்
ஷட்டரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அரசூர், அம்மாபட்டி, ஆமந்தகடவு பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பாறு அணைக்கு செல்லும்.
நிலத்தடி நீர்மட்டம்
உப்பாறுஓடையில் கட்டப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிமங்கலம் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் பெதப்பம்பட்டி அருகே கட்டப்பட்ட தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் தடுப்பு அணைகள் நிரம்பி வழிகிறது.இதனால் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story