காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Nov 2021 5:49 PM IST (Updated: 6 Nov 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட, காரை மேட்டுத்தெரு வார்டு எண் 2 மற்றும் 19 ஆகிய பகுதிகளுக்கு, கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை ராணிப்பேட்டை-தெங்கால் சாலையில், காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நகரசபை உறுப்பினர் மணிமேகலை உள்பட 30 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story