மோட்டார்சைக்கிள் விபத்தில் தனியார் வங்கி ஊழியர் சாவு


மோட்டார்சைக்கிள் விபத்தில் தனியார் வங்கி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 6 Nov 2021 5:56 PM IST (Updated: 6 Nov 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 28), தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

அமர்நாத் நேற்று இரவு பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்திற்கு சென்று கடன் பணத்தை வசூலித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கீழ்ப்பட்டி கிராமம் அருகே சென்றபோது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. 

இதில்  தூக்கி வீசப்பட்ட அமர்நாத்திற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.. சைக்கிளில் சென்ற ராசம்பட்டி சாந்தி நகரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வினோத்குமார் (38) என்பவர் படுகாயமடைந்தார். 

உடனடியாக இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிேலயே அமர்நாத்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


Next Story