மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கடலில் குளித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு + "||" + Police sub-inspector dies after bathing in Thiruchendur sea

திருச்செந்தூர் கடலில் குளித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

திருச்செந்தூர் கடலில் குளித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
திருச்செந்தூர் கடலில் குளித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.
திருச்செந்தூர்:
சென்னை திருமுல்லைவாயில் ஜெயலட்சுமிநகர் முதலாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 57). இவர் சென்னை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் வேனில் நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். 
இங்கு கோவில் கடலில் ராஜசேகரன் தனது குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜசேகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜசேகரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜசேகரனுக்கு ஜோதிலட்சுமி (54), என்ற மனைவியும், சுந்தரவடிவேல் (34) என்ற மகனும், இளவரசி (32). கலையரசி (30), யமுனா (25) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி திடீர் சாவு
சிவகிரியில் தொழிலாளி திடீரென்று இறந்தார்.
2. பெண் திடீர் சாவு
பணகுடி அருகே பெண் திடீரென்று இறந்தார்.
3. வடமாநில தொழிலாளி திடீர் சாவு
வடமாநில தொழிலாளி திடீரென்று இறந்தார்.
4. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு
பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்ததால் அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
5. ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் சாவு
ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீரென்று இறந்தார்.