ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்


ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
x
தினத்தந்தி 6 Nov 2021 9:01 PM IST (Updated: 6 Nov 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

25 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

ராமேசுவரம், 
25 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
வேலைநிறுத்தம்
ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் உற்பத்தி விலையில் டீசல் வழங்க வலியுறுத்தியும்  கடந்த மாதம் 8-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல திட்டமிட்டனர். 
ஆனால் அதன்பின்னர் தொடர்ச்சியாக வங்கக்கடலில் உருவாகி இருந்த புயல் சின்னம் காரணமாகவும் கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்தும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 25 நாட்களுக்குமேல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
எதிர்பார்ப்பு
இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப் பட்டது. நேற்று காலை துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று  500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை  கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story