வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (வயது 35). இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வலட்சுமி (30). இவர்களுக்கு முத்தரசன் (4) என்ற மகன் உள்ளான்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வலட்சுமி கோபித்துக்கொண்டு தனது மகனுடன் கோவில்பட்டி வள்ளுவர்நகரில் உள்ள அக்காள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மணிகண்டன், மனைவியை பலமுறை வீட்டிற்கு அழைத்தும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த மணிகண்டன், சேலையால் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story