தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 6 Nov 2021 9:51 PM IST (Updated: 6 Nov 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட விளாகம் கிராமத்தில் தெற்கு தெருவில் சாலை வசதி இல்லாமல் 20 ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை அமைத்து தரப்படாமல் இருப்பதால் கழிவுநீர் வடிகாலும் இல்லை. இதனால் தெருவின் நடுவிலேயே சாக்கடை நீர் ஓடும் நிலை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விளாகம், அரியலூர்.

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் 
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பொன்மலைப்பட்டி பகுதி காந்தி தெரு இந்தியன் வங்கி அருகில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர்  இன்றி அவதிப்படுகின்றனர். மேலும் இந்த குடிநீர் சாலையில் தேங்கி நிற்பதினால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலைப்பட்டி, திருச்சி. 

போதிய டாக்டர்கள் இன்றி நோயாளிகள் அவதி 
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், மேல் சிகிச்சை பெறுவதற்கு புதுக்கோட்டை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் இரவு நேரத்தில் ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சைக்காகவும், பிரசவ சிகிச்சை பெறுவதற்கும் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தால் போதிய டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 
திருச்சி 39-வது வார்டு எம்.ஜி.ஆர். மன்றம் அருகில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை கால்நடைகள் உண்பதுடன் மழைபெய்யும்போது இதில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், எம்.ஜி.ஆர். மன்றம், திருச்சி. 

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தமிழரசன், புதுக்குறிச்சி, பெரம்பலூர். 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, வாழவந்தான்கோட்டை பஞ்சாயத்து, அய்யம்பட்டி, பொன்நகர் தெருக்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளிலும், பள்ளத்திலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஜான் பீட்டர், அய்யம்பட்டி, திருச்சி. 
இதேபோல் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் சாலை முழுவதும் நீர் நிரம்பி உள்ளதால் தெரு வாசிகள் நடந்து போகவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 ஹேமா பிரிய தர்ஷினி, உறையூர், திருச்சி. 

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் 
கரூர் காந்திகிராமம் மெயின் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையை திடீரென கடந்து ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காந்திகிராமம், கரூர். 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு தஞ்சை ரோடு அாியமங்கலம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சாலையில் மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி. 


Next Story