அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் சூரசம்கார விழா
அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் சூரசம்கார விழா நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. நேற்று மூன்றாம் நாள் விழாவையொட்டி முருகர், வள்ளி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொட்ந்து முருகன் வள்ளி, தெய்வானையுடன் ஆட்டுக்கிடா வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி அளித்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தின் உள்ளேயே சாமி திருவீதி உலா நடந்தது. வரும் செவ்வாய்க்கிழமை (9-ந் தேதி) கோவில் வளாகத்தின் உள்ளேயே சூரசம்ஹார விழாவும், புதன்கிழமை (10-ந் தேதி) காலை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story