பெண்ணுடன் தங்கியதால் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சாவு


பெண்ணுடன் தங்கியதால் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சாவு
x
தினத்தந்தி 6 Nov 2021 10:39 PM IST (Updated: 6 Nov 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே பெண்ணுடன் தங்கியதால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு

ஆற்காடு அருகே பெண்ணுடன் தங்கியதால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல் தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாழனூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (வயது 55). விதவையான இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். 

இந்திரா கடந்த சில ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். 

அப்போது அதே ஊரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சேகர் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா மீண்டும் சொந்த ஊரான தாழனூர் பகுதிக்கு வந்துவிட்டார். 

ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (60) என்பவரின் டிராக்டரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். 

அப்போது சீனிவாசனுக்கும் இந்திராவுக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சீனிவாசன் இந்திராவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. 

மோதல்

கடந்த 30-ந்் தேதி காலை கூலி கொடுப்பதற்காக இந்திரா வீட்டிற்கு சீனிவாசன் வந்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் வாணியம்பாடியை சேர்ந்த மற்றொரு கள்ளக்காதலன் சேகரும் இந்திராவை பார்க்க வந்துள்ளார். 

இந்திரா வீட்டில் சீனிவாசன் இருப்பதை கண்ட சேகர் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் சீனிவாசனும் இந்திராவும் சேர்ந்த சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சேகரும் அங்கிருந்த இரும்பினால் ஆன அடுப்பூதும் ஊதுகுழலால் சீனிவாசன் மற்றும் இந்திராவை பலமாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் இன்று காலை  சிகிச்சை பலனின்றி இறந்தார். 

சம்பவம் குறித்து ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story