செல்போன் சார்ஜ் செய்வதாக கூறி நகை திருடிய வாலிபர் கைது


செல்போன் சார்ஜ் செய்வதாக கூறி   நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 10:42 PM IST (Updated: 6 Nov 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

செல்போன் சார்ஜ் செய்வதாக கூறி நகை திருடிய வாலிபர் கைது

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பின்னாவரம் காலனி எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபுவின் மனைவி ஜான்சிராணி (32). 

இவரது மாமனார் தனபால் தனது வீட்டில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் எதிர் வீட்டில் இருக்கும் திலிப் (21) தனது வீட்டில் மின்சாரம் இல்லை எனவே செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய தனபால் வீட்டின் கதவை திறந்து செல்போன் சார்ஜ் செய்ய அனுமதித்தார்.

செல்போனுக்கு சார்ஜ் போட சென்றவர், பூட்டாமல் திறந்து இருந்த பீரோவில் பர்சில் இருந்த தங்க கம்மல், செயின், ஜிமிக்கி மற்றும் வெள்ளி கால்கொலுசு, வெள்ளி மோதிரம் உள்ளிட்ட 3½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளார். 

பீரோவில் இருந்த நகை காணாமல் போனதால் நெமிலி போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் கொடுத்தார். 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், திலிப் நகை திருடியது ெதரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த திருட்டு போன நகைகளை மீட்டனர்.

Next Story