நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தோகைமலை,
குத்தகை
கடவூர் தாலுகா வெள்ளபட்டி ஊராட்சி பொன்னிபட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருடைய மனைவி வசந்தா (வயது 48). இவர் கணக்கபிள்ளையூரில் வசித்து வரும் துரைசாமி (65) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 30-11-2000 அன்று ரூ.50 ஆயிரத்திற்கு குத்தகை மற்றும் ஈட்டு பத்திரமாக வாங்கினார்.
பின்னர் அந்த நிலத்தில் ஆண்டியப்பன் மற்றும் வசந்தா ஆகியோர் விவசாயம் செய்து வந்தனர்.
கொலை மிரட்டல்
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி ஆண்டியப்பனும் அவரது மனைவி வசந்தா ஆகியோர் வழக்கம்போல் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த துரைசாமி மற்றும் அவருடைய உறவினர்களான வீரப்பன் (45) விவேகானந்தன், கார்த்திக் ஆகிய 4 பேரும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் கணவன்-மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றுள்ளனர். இதனால் பீதியடைந்த அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
4 பேர் மீது வழக்கு
இதனைதொடர்ந்து துரைசாமி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த தண்ணீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்னனிடம் வசந்தா புகார் அளித்தார்.
இதையடுத்து, ஐ.ஜி. உத்தரவின் பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த துரைசாமி, வீரப்பன், விவேகானந்தன, கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story