சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். அணைக்கு விநாடிக்கு 1300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து வினாடிக்கு 1100 கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. 200 கனஅடி நீர் இடது மற்றும் வலதுபுற பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்படுகிறது.
இதனால் சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
எனவே, கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story