இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூசி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைகழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவரது மகள் ரம்யா (24), காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள வெள்ளகுளம் கூட்ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் ரம்யா விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரம்யாவின் தந்தை ஜெயராமன் தூசி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story