காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
செங்கம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
செங்கம்
செங்கம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
காதல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்துள்ள நாகப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னகுழந்தை என்பவரது மகன் சிவகுமார் (வயது 26). இவரது தாய்மாமன் வினோத்குமார் குடும்பத்தோடு பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வினோத்குமாரின் மகள் நிகிதாவும் (18), சிவகுமாரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
நிகிதாவை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு சென்றபோது படித்து முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக வினோத்குமார் கூறியுள்ளார்.
தொடர்ந்து சிவகுமாரும், நிகிதாவும் தினமும் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் வினோத்குமார், நிகிதாவை கண்டித்துள்ளார். தொடர்ந்து சிவகுமார் பெங்களூருவில் இருந்து நிகிதாவை நாகப்பாடிக்கு அழைத்து வந்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
இதனையடுத்து இருவரும் விஷம் குடித்துள்ளனர். உடனே உறவினர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து ெசன்றனர். ஆனால் வழியிலேயே சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிகிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story