திருவண்ணாமலை அருகே விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி


திருவண்ணாமலை அருகே விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Nov 2021 11:26 PM IST (Updated: 6 Nov 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 பேர் பலி

திருவண்ணாமலை ஆர்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவரது நண்பர்களான திருச்சி மாவட்டம் மின்னத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ரங்கசாமி (29), அபிஷேக் (19). இவா்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பு ராஜேஷ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை அருகே உள்ள புனல்காடு பகுதியில் வந்த போது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த செங்கம் தாலுகா மஷார் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ரங்கசாமி, ஆறுமுகம் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

 மருத்துவமனையில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story